வாட்ஸ் ஆப் செயல்பாட்டுக்கு தடையா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
தற்போதைய உலகில் மக்கள் சமார்ட் போன் இல்லாமல் யாரும் இருப்பதில்லை.அதில் பல சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.பேஸ் புக் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை.முக்கியமாக பேஸ் புக்கின் சகோதரி தான் வாட்ஸ் ஆப்.உலகவில் 75% பேர் வாட்ஸ் ஆப் பயன்படுத்தி வருகின்றனர்.சில மாதம் முன் வாட்ஸ் ஆப் நிறுவனம்,புதிய கட்டுப்பாடுகளை மக்களுக்கும் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியது.அந்த கட்டுப்பாடுகளில் அவர்கள் கூறியது,வாட்ஸ் ஆப்-யில் பகிரப்படும் அனைத்து தகவல்களும் பேஸ்புக் கிற்கும் அனுப்பப்படும் என தெரிவித்தனர்.
அதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ் ஆப் உபயோகிக்க முடியும் எனவும் கூறினர்.இதனால் வாட்சாப் உபயோகித்த மக்கள் அனைவரும் பெருமளவு அதிர்ச்சியடைந்தனர்.இதனை எதிர்த்து பலர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.அந்தவகையில் பல நிறுவனங்களும் இந்தியா தொழில் போட்டி ஆணையத்திடமும் முறையீடு செய்தனர்.நிறுவனங்கள் கொடுத்த கோரிக்கையை இந்திய தொழில் போட்டி ஆணையம் ஏற்றுக்கொண்டது.அதனைத்தொடர்ந்து வாட்ஸ் ஆப் நிறுவனம் தொழில் போட்டியை தடுக்கிறதா என்பதை விசாரிக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை வாட்ஸ் ஆப் நிறுவனம் ஏற்காமல் அந்நிறுவனத்தின் உத்தரவிற்கு எதிராக பேஸ் புக் மற்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,தீர்ப்பை வழங்காமல் வழக்கை ஒத்தி வைத்தது.அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.மேற்கொண்டு தீர்ப்பின்,வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறிய தகவல்கள் பரிமாற்றம் ரத்து செய்யப்படுமா?அல்லது ரத்து செய்யப்படாமல் மக்கள் வாட்ஸ் ஆப் உபயோகிப்பதை நிறுத்தி விடுவார்களா என தீர்ப்பின் முடிவில் தான் தெரிய வரும்.