ஆக்சிஜன் அளவு 90% மற்றும்  94% உள்ளவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கத் தடை!!

Photo of author

By CineDesk

ஆக்சிஜன் அளவு 90% மற்றும்  94% உள்ளவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கத் தடை!!

கொரோனா வைரஸ் 2 ஆம் அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இதற்காகத் தமிழக அரசு பல கட்டுபாடுகளை மேற்க் கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடந்த்து தமிழகத்தில் முழு ஊரடங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து ஆக்சிஜன் தட்டுப்பாடு மேலும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் ஆக்சிஜன் அளவு 90% அல்லது அதற்க்கு மேல் 94% ஆக இருபவர்களை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதி கிடையாது என அரசு கூறியுள்ளது.

மேலும் இது குறித்து தமிழக அரசின் மாநில மக்கள் நலவாழ்வுத் துறை தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை முறைகள் தொடர்பாக பல புதிய நெறி முறைகளை அறிவித்துள்ளது. அந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் முதலில் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அருகில் இருக்கும்  கொரோனா சிகிச்சை மையத்தை அணுகவேண்டும். மேலும் அங்கு அவர்களின் உடல் நிலையைக் குறித்த முதற்கட்டப் பரிசோதனை வழங்கப்படும். அந்தப் பரிசோதனையில்  கொரோனா வைரஸ்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  உடலில் ஆக்சிஜன் அளவு 90% அல்லது அதற்க்கு மேலாக 94 % ஆக இருக்கும் பட்ச்சத்தில்  அவர்கள் மருத்துவரின் அறிவுரைப் படி மாத்திரைகளை மேற்க்கொண்டு தங்களது வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். வீட்டுத் தனிமையில் இருக்கும் நேரத்தில் அவர்களின் ஆக்சிஜன் அளவு மாறும் பட்ச்சத்தில் உடனடியாக கொரோனா சிகிச்சை மையத்தை அணுகவேண்டும். பிறகு  அங்குள்ள மருத்துவரின் ஆலோசனையின் படி அங்கு உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் .

மேலும் கொரோனா வைரஸ்த் தொற்று தீவிரமாகப் பாதிக்கப்படுபவர்களின்  ஆக்சிஜன் அளவு 90 % கீழ் செல்லும் பட்ச்சத்தில் மட்டுமே அந்த நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும். மேலும் ஆக்சிஜன் அளவு சீராக இருக்கும் மக்கள் பலர் அச்சத்திலேயே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் கொரோனாத் தொற்றால் தீவிரமாகப் பாதிக்கப்படும் சிலருக்கு அவசர தேவைகளுக்குக் கூட மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி கிடைப்பதில்லை. எனவே தமிழக அரசு இந்த புதிய நெறிமுறைகளை அமல்ப்படுத்தி உள்ளது.