உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை குறித்த வழக்கு!! மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

Photo of author

By Savitha

உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை குறித்த வழக்கு!! மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

Savitha

உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கும் விவகாரம் தொடர்பாக, தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு – மத்திய அரசு அனைத்து மாநிலங்கள், பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.

மூன்று வாரங்களுக்கு பதில் அளிக்க, மத்திய அரசு, அனைத்து மாநிலங்கள், பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கும் விவகாரத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கு அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் உரிமை அளித்திருப்பது போல, நமது நாட்டில் உரிமம் பெறாமல் துப்பாக்கிகளை வைத்திருக்க உரிமம் இல்லை என்றும், உரிமம் பெறாத துப்பாக்கிகளின் பயன்பாடு நிலப்பிரபுத்துவ மனுப்பான்மை என்றும், உரிமம் பேராத துப்பாக்கிகளின் பயன்பாடு மோசமான போக்கு என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது .

இந்நிலையில், உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கும் விவகாரத்தில், தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு தொடர்பாக மூன்று வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசு அனைத்து மாநிலங்கள், பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது