இனி இந்த செயலிகளை ஸ்மார்ட் போனில் பயன்படுத்த தடை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.தற்போது ஸ்மார் போன் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.ஒவ்வொன்றுக்கும் தனித்தனி செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் உணவுகள் மற்றும் பொருட்கள் வாங்க அமேசான்,பிளிப்கார்ட்,சொமேட்டோ போன்ற செயலிகள் உள்ளது,அதுபோலவே விளையாட்டுகளுக்கும் எண்ணற்ற செயலிகள் உள்ளது.தற்போது இந்தியாவில் இணையவழி சூதாதட்டங்களில் பலர் ஈடுபட்டு வருவதோடு அதனால் அதிக பணத்தை இழக்கும் வாய்புள்ளது அதனால் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மேலும் கடன் செயலிகள் மூலமாக உடனடி கடன் பெறுபவர்கள் அதனை திரும்பச் செலுத்த முடியாமல் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.இதுபோன்ற கைபேசி செயலிகள் மூலமாக இந்தியர்களின் சுய விவரங்கள் திருடப்படுகின்றது.அதனால் நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள சீன செயலிகள் உள்பட மொத்தம் 232 வெளிநாட்டு கைப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் மத்திய மின்னணு மற்றும் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் பந்தயம் சூதாட்டம் மற்றும் பண மோசடிகளில் தொடர்பு கொண்ட 138 கைப்பேசி செயலிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத 94 கடன் செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த செயலிகள் அனைத்தும் சீனா உள்பட வெளிநாடுகளிலிருந்து செயல்படுத்தப்பட்டு வந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி பலராலும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வந்த டிக்டாக்,பப்ஜி,வீ சாட் உள்பட 200 க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த 2020 இல் தடை விதிக்கப்பட்டது.