இனி தனியார் வாகனங்களில் பதவியை ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை!!சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!!

0
131
prohibition-on-affixing-post-stickers-on-private-vehicles-chennai-high-court-takes-action
prohibition-on-affixing-post-stickers-on-private-vehicles-chennai-high-court-takes-action

இனி தனியார் வாகனங்களில் பதவியை ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை!!சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!!

தனியார் வாகனங்களில் தங்களுடைய பதவியை ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்பொழுது தனியார் வாகனங்களில் தங்களுடைய பதவியை அதாவது காவல்துறை மீடியா,அரசுத்துறை,வழக்கறிஞர் என தங்கள் பதவியை குறிக்கும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

ஏற்கனவே வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தடையை மாநில முழுவதும் செயல்படுத்த கோரி சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வாகனங்களில் தங்களுடைய பதவியை ஸ்டிக்கர் ஒட்டும் இப்பழக்கத்தை தடை விதித்தும், மேலும் இத்தடையானது தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த கோரி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையிலும் அது முறையாக அமல்படுத்தப்படவில்லை எனவும் வாகனங்களில் முன் பக்க பின் பக்க கண்ணாடிகளில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள், நடிகர்களின் படங்கள், மத சின்னங்களை ஸ்டிக்கராக ஒட்ட தடை விதிக்க வேண்டும்.

மேலும் பேருந்துகளிலும் வணிக நிறுவனம் விளம்பரங்கள் செய்வதை தடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இக்கோரிக்கைக்கு அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.