வாக்கு எண்ணிக்கைக்கு தடையா? அற்ப காரணம் என கூறும் உயர்நீதிமன்றம்!
தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள் அனைவரும் தேர்தல் முடிவுகளை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்த சமயத்தில் தேர்தலில் குளறுபடிகள் அதிக அளவு நடந்துள்ளதால் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கூடாது என உயர்நீதி மன்றத்தில் புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வழக்கு தொடுத்தார்.
அந்த மனுவில் கிருஷ்ணசாமி கூறியிருந்தது,தேர்தல் நேரத்தில் பண பட்டுவாடா நடப்பதை தடுக்க தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் ஆணையம் பலரை நியமித்தனர்.ஆனால் அதனையெல்லாம் மீறி பண பட்டுவாடா நடந்துள்ளது.பல தொகுதிகளில் நடந்த பண பட்டுவாடக் குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தோம்.ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.அதுமட்டுமின்றி இதுவரை தேர்தல் ஆணையம் 430 கோடி ரூபாயை பறிமுதல் செய்ததாக கூறியுள்ளது.
அதனால் பணபட்டுவாடா நடந்ததை குறித்து உச்சநீதிமன்றம் நீதிபதி அடங்கிய தனி குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார்.அதனால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நாங்கள் அளித்த புகாரை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டுமென்றும் மனுவில் கூறியிருந்தார். இந்த மனு வழக்கு இன்று நீதிபதி சஞ்ஜிப் தலைமையில் அமர்வுக்கு வந்தது.
அப்போது நீதிபதி கூறியது,வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது அதுமட்டுமின்றி கிருஷ்ணசாமி விளம்பரத்திற்காக இவ்வாறு மனு அளித்துள்ளார்.இது போன்ற அற்ப காரணங்களுக்காக வழக்கு தொடர்வதை கிருஷ்ணசாமி விட்டுவிட வேண்டுமென்று அவரது மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.