அக்னிபாத் திட்டம்! நுழைவுத் தேர்வு பற்றி ராணுவம் வெளியிட்ட அறிவிப்பு! 

0
231

அக்னிபாத் திட்டம்! நுழைவுத் தேர்வு பற்றி ராணுவம் வெளியிட்ட அறிவிப்பு! 

அக்னி வீரர் பணியிடங்களுக்கு இனிமேல் முதலில் நுழைவுத் தேர்வு முதலில் நடத்த பெரும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த அக்னிபாத் திட்டம் என்பது   இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் (ராணுவம், விமானப்படை, கடற்படை) 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டம் ஆகும். இதற்காக இவர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி வழங்கப்படும். இதன்படி இந்திய முப்படைகளுக்கும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு முதலில் உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவை நடத்த பெற்று வந்தது.

இந்த சோதனைகள் முடிந்த பிறகு பொது நுழைவுத்தேர்வு எனப்படும் எழுத்து தேர்வு முறை நடைபெற்று வந்தது.  இனிமேல் நுழைவுத் தேர்வு முதலில் நடத்த திட்டமிட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து செய்தித்தாள்களிலும் ராணுவம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராணுவ வட்டாரங்களில் கூறப்படுவதாவது, இதுவரை அக்னி வீரர் தேர்வில் முதலில் உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ சோதனை நடைபெற்று வந்தது. பின்னர் பொது நுழைவுத்தேர்வு  நடத்தப்பட்டது. ஆனால் இனிமேல் முதலில் ஆன்லைன் மூலம் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.  இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்து உடல் தகுதி தேர்வு மருத்துவ பரிசோதனைகளும் நடைபெற உள்ளன. இது தேர்வு நடைமுறைகளை எளிதாக்க உதவும்.

இந்த நடைமுறையானது வீரர்களின் அறிவாற்றல் அம்சத்தில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்யும். ஆட் தேர்வு முகாம்களில் காணப்படும் அதிக கூட்டத்தை தவிர்த்து எளிதாக கையாள கூடியதாக மாறும். என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி வருகின்ற ஏப்ரல் மாதம் நாடு முழுவதிலும் 200 இடங்களில் பொது நுழைவுத் தேர்வு நடைபெற இருக்கின்றன. இதற்கான பணிகள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிகிறது.

Previous articleஇனி இந்த செயலிகளை ஸ்மார்ட் போனில் பயன்படுத்த தடை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!
Next articleசீருடைய பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! இன்று சான்றிதழ் சரிபார்ப்பு!