9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 2 ஏவுகணைகளை விண்ணில் ஏவ திட்டம் : இஸ்ரோ அறிவிப்பு

Photo of author

By Parthipan K

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பூமியை கண்காணிக்க ஜிசாட்-16 செயற்கைக்கோளை கடந்த பிப்ரவரி மாதம், இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தயாரித்து வந்தது.

இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஸ் – 10 என்ற ராக்கெட் மூலம் கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் தேதி மாலை 5.42 மணிக்கு விண்ணில் ஏவ தயாராக இருந்தது.ஆனால் ஏவுகணைகளில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதினால் விண்ணில் ஏவும் திட்டத்தை ஒத்தி வைத்தது.

பிறகு கொரோனாவால் 9 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அதனை விண்ணில் ஏவ ஆயத்தமாகி வருகின்றது. வரும் நவம்பர் மாதத்தில் இரண்டாவது ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது .மேலும் இதற்கான பணிகளை இஸ்ரோ நிறுவனம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும் ,பிஎஸ்எல்வி சி-49 ,பிஎஸ்எல்வி சி – 50 ஆகிய ஏவுகணைகளையும் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மைய கட்டுப்பாட்டாளர் சீனிவாசனும் ரெட்டி தெரிவித்துள்ளார்.