மண் பாண்டங்கள் வைத்து வாக்குறுதி விழிப்புணர்வு! வியப்பில் பொதுமக்கள்!
சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் பயமின்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பல இடங்களில் விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில் 2021 ஏப்ரலில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என புதிய முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.முதலில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் தகவல் மையத்தை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் தொடங்கி வைத்தார்.இதனை தொடர்ந்து சி.எஸ்.ஐ பள்ளியில் புதிதாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களை மரம் நட வைத்தார்.இவர் இவ்வாறு செய்தது அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.
அதன்பின் புதிதாக வாக்களிக்க போகும் வாக்காளர்கள் மணியடித்து நாங்கள் அச்சமின்றி வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.அதனையடுத்து அனைவரும் வியக்கும் விதமாக குலாலர் தெருவில் மண்பாண்ட உற்பத்தியாளர்கள் மண்பாண்ட பொருட்களை வைத்து நூறு சதவீதம் அனைவரும் வாக்களிப்போம் என வடிவமைத்திருந்தது மிகவும் வியப்பாக இருந்தது.இவர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை வைத்து இவ்வாறு செய்ததை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.இதனையடுத்து நடமாடும் வாக்காளர் சேவை மையத்தை கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
இவருடன் இந்நிகழ்ச்சில் மானாமதுரை வட்டாச்சியர் இரா.மாணிக்கவாசகம் மற்றும் இளையான்குடி வட்டாச்சியர் சி.ஆனந்த்,மானாமதுரை பேரூராட்சி செயல அலுவலர் குமரேசன் தேர்தல் துணை வட்டாட்சியர் சுரேஷ் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.