ஜெயிலர் படத்தின் முதல் பாடலுக்கான புரோமோ! முழுப்பாடல் 6ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!!

0
61

ஜெயிலர் படத்தின் முதல் பாடலுக்கான புரோமோ! முழுப்பாடல் 6ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!!

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலுக்கான ரிலீஸ் தேதியை ஜெயிலர் படக்குழு வெளியிட்டுள்ளது.

 

நடிகர்.ரஜினிகாந்த் தற்பொழுது நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜெயிலர் ஆகும். ஜெயிலர் திரைப்படம் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 169வது திரைப்படம் ஆகும். ஜெயிலர் திரைப்படத்தில் சிவராஜ் குமார், சுனில், மோகன் லால், ஜேக்கி ஷெரூப், தமன்னா, யோகி பாபு, ரம்யா கிருஷ்னன் மற்றும் பல முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர்.

 

சன்பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் அவர்கள் ஜெயிலர் திரைப்படத்தை தயாரித்துள்ளார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் நேற்று அதாவது ஜூன் 3ம் தேதி மாலை ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் ஆகும் தேதியை ஜெயிலர் படக்குழு அறிவித்தது.

 

ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலுக்கு “காவாலா” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் அவரது ஸ்டைலில் புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு காவாலா பாடல் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளார். வழக்கம் போல 6 மணிக்கு புரோமோ வெளியாகும் என்று அறிவித்து தாமதமாகத்தான் புரோமோ வீடியோ வெளியானது.

 

மேலும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த புரோமோ வீடியோவை வெளியிட்டு “இறுதியாக ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடலுக்கான நேரம். தமன்னாவுடன் நடனம் ஆடுவதற்கு தயாராகுங்கள்” என்று பதிவிட்டுள்ளது. இந்த புரோமோ வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.