இயக்குநராக அறிமுகமாகும் பிரபல யூடியூபர்! நடிகை நயன்தாரா அவர்கள் தான் படத்தின் கதாநாயகியா!!

0
72

இயக்குநராக அறிமுகமாகும் பிரபல யூடியூபர்! நடிகை நயன்தாரா அவர்கள் தான் படத்தின் கதாநாயகியா!!

 

பிரபல யூடியூபர் ஒருவர் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாகவும் அந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரை  லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவரும் அழைக்கின்றனர். நடிகை நயன்தாரா அவர்கள் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், சூரியா, கார்த்தி மற்றும் பல முன்னனி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் தற்பொழுது நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்னும் சில படங்களில் நடித்து வருககறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா அடுத்ததாக பிரபல யூடியூபர் டியூப் விக்கி இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நடிகை நயன்தாரா நடிக்கும் இந்த திரைப்படத்தை பிரபல யூடியூபர் டியூப் விக்கி அவர்கள் இயக்கவுள்ளார். இந்த திரைப்படம் மூலமாக டியூப் விக்கி யூடியூபரில் இருந்து இயக்குநராக புரோமோசன் ஆகவுள்ளார். நடிகை நயன்தாரா யூடியூபர் டியூப் விக்கி கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

 

இந்த மாதம் அதாவது ஜூலை 14ம் தேதி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.  ஏற்கனவே பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன்.அவர்கள் கதாநாயகனாக அறிமுகமான நிலையில் மற்றொரு பிரபல யூடியூபர் டியூப் விக்கி அவர்கள் இயக்குநராக அறிமுகமாகவுள்ளது ரசிகர்கர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.