பதவி உயர்வு கிடையாது திமுக ஆதரவு பெற்ற அமைப்புக்கு எடப்பாடி வைத்த ஆப்பு!
திமுகவின் ஆதரவு பெற்ற ஜாக்டோ – ஜியோ அமைப்பின் சார்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதிகப்படியான சம்பளம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடந்தது.
போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஆசிரியர்கள் பணியிடைநீக்கம், பணி மாறுதல் என பல நடவடிக்கைகள் மூலம் போராட்டத்தை தீர்த்து போக செய்தது தமிழக அரசு.
இந்நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்க 1,579 பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக் கல்வித்துறை தயாரித்து அரசுக்கு அனுப்ப உள்ளது. அதற்கு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதில் துறைரீதியான நடவடிக்கைக்கு ஆசிரியர் ஆளாகியிருக்கக் கூடாது என்பது முக்கியமான விதிமுறை ஆகும்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுள் 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது விதி 17 (b)யின் கீழ் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்பு ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை அரசு ரத்து செய்தபோதும் 17 (b) விதியின் கீழான குற்றச்சாட்டு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் பதவி உயர்வுக்காக தேர்வான 1,579 பேரில் துறைரீதியான நடவடிக்கை நிலுவையில் இருப்பவர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஆசிரியர்கள், இதனால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு பறிபோகிவிடுமோ என்று கலக்கத்தில் உள்ளனர், வழக்கு தொடரவும் முடிவேடுத்துள்ளதாக தெரிகிறது.