பல ஆயிரம் கோடி மதிப்புடைய சொத்து.. ராதாவிற்கு எம்ஜிஆர் வழங்கியது உண்மையா!! தயாரிப்பாளர் சித்ரா லக்ஷ்மணன்!!

Photo of author

By Gayathri

மூன்று முறை முதல்வராக தமிழகத்தை ஆட்சி புரிந்த டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் தமிழகத்திற்கு சிறந்த தலைவராக மட்டுமின்றி ரசிகர்களுக்கும் மிகச் சிறந்த தலைவனாக விளங்கியவர்.

இவருக்கு பொதுவாகவே ஏழைகளுக்கு உதவும் பண்பானது அதிகம் இருக்கிறது. அதற்கு உதாரணமாக, எம் ஆர் ராதா தன்னை சுட்ட பொழுது மீண்டும் எம்ஜிஆர் அவரை சுட்டு இருக்கிறார். சத்தம் கேட்டு அனைவரும் வரும்பொழுது முதலில் எம் ஆர் ராதாவை கவனிக்கும்படி ரத்த வெள்ளத்தில் இருந்த எம் ஜி ஆர் அவர்கள் கூறியிருக்கிறார்.

இவ்வாறு தன் வாழ்வில் விட்டுக்கொடுத்தல், உதவி செய்தல் போன்ற மேன்மையான குணங்களைக் கொண்டவர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள். இப்படிப்பட்ட இவர் நடிகைகளான ராதா மற்றும் அம்பிகாவிற்கு நிலம் வாங்கி கொடுத்ததாக செய்திகள் பரவி வருகின்றன.

இது குறித்த தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்திருப்பதாவது :-

தமிழ்சினிமாவில் அரசியலில் தனக்கென தனி இடம் பிடித்து இன்று அவர் மறைந்தாலும்கூட மக்களின் மனதில் வாழ்ந்து வருபவர் எம்ஜிஆர். சினிமாவில் ஆட்சி செய்த அவர் அரசியலிலும் தொடர்ந்து 3 முறை மக்களின் முதல்வராக இருந்தார். நடிகராக இருந்தபோது அரசியலுக்கு வந்தபோதும் தனது வாழ்நாளில் பலருக்கும் உதவிகளை செய்துள்ளார்.

அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகைகளாக இருப்பவர்கள் அம்பிகா, ராதா. இவர்கள் சிவாஜி, ரஜினி, கமல், மோகன், பிரபு, விஜயகாந்த் என பலருடனும் இணைந்து வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்கள். ராதாவின் திருமணத்திற்குப் பிறகு சினிமா துறையில் இருந்து விலகிவிட்டார்.

ஆனாலும் அவரது அக்கா அம்பிகா தற்போது வரை சினிமாவில் நடித்து வருகிறார். சீரியலிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது இருவரும் ஏஆர்எஸ். கார்டனை வாங்கினார்கள். இவர்களுடைய சொந்த உழைப்பில் வாங்கப்பட்ட அந்த கார்டன் ஆனது அப்போதைய முதல்வராக இருந்த எம் ஜி ஆர் ஆல் கொடுக்கப்பட்டது என்றால் அது தவறு.

ஏனென்றால் அது அரசுக்கு சொந்தமான நிலம் கிடையாது. அதிலும் குறிப்பாக அந்த நிலம் ஒன்றரை இயக்க அளவுள்ளது. அதன் அருகில் உள்ள நிலம் இயக்குனர் பாரதிராஜா வாங்கியதாகும். எனவே ராதா அவர்களுடைய சொந்த பணத்தின் மூலமே அந்த நிலமானது வாங்கப்பட்டது என தெரிவித்தார்.

அந்த ஏ ஆர் எஸ் கார்டனின் தற்போதைய விலை பல ஆயிரம் கோடி என்ற தகவலையும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.