கோவில் நிலத்தை காவல்துறைக்கு மாற்ற முயற்சித்ததால் வெடித்த போராட்டம்!

Photo of author

By Pavithra

கோவில் நிலத்தை காவல்துறைக்கு மாற்ற முயற்சித்ததால் வெடித்த போராட்டம்!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோவில் நிலத்தை காவல்துறைக்கு மாற்ற முயற்சித்ததால்,நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள்,இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு.

திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் நிலத்தை மக்களின் கருத்தைக் கேட்காமல் காவல்துறைக்கு மாற்றம் முயற்சித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்பகுதியில் உள்ள பழமையான மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 11.6 ஏக்கர் நிலத்தை,இந்து சமய அறநிலைத் துறையினர் கிராம மக்களின் கருத்தை கேட்காமல்,காவல் துறைக்கு மாற்ற முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியானதை அடுத்து,நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் இதனை கண்டித்து,மங்கலம் சாலை பெரிய ஆண்டிபாளையம் பிரிவு பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கொரோனா காலத்தில்,சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.