சென்னை அணி வீரர்களுக்கு 3-ம் கட்ட பரிசோதனை

0
176
ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருந்த சென்னை அணி வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்கள் ஆகியோருக்கு 3-ம் கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் வீரர்கள் இருவரும் தீபக் சாஹர், ருத்துராஜ் கெய்க்வாட் எனத் தெரியவந்தது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மற்ற வீரர்களும் கூடுதலாக ஒரு வாரம் தனிமையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இன்னும் ஒரு கொரோனா பரிசோதனை உள்ளது. அதிலும் வீரர்களுக்கு நெகட்டிவ் என வந்தால், வீரர்கள் ஐந்தாம் தேதியில் இருந்து பயிற்சிக்கு தயாராகிவிடுவார்கள்.
Previous articleகோவில் நிலத்தை காவல்துறைக்கு மாற்ற முயற்சித்ததால் வெடித்த போராட்டம்!
Next articleஆன்லைன் வகுப்பு விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:! தமிழக அரசு உறுதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here