பளார் அடி ! பெருமை சேர்த்த தமிழன் ! ‘தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு’!

Photo of author

By Kowsalya

பளார் அடி ! பெருமை சேர்த்த தமிழன்.’தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு’.

 

இந்தச் சம்பவம் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுள்ளது.

கோலாலம்பூரில் தோட்ட வேலை செய்து வந்த இந்திய தொழிலாளியை இந்தோனேசியாவை சேர்ந்த தொழிலாளி மிரட்டியுள்ளார். அவர் மீது எச்சிலை துப்பியுள்ளார்.

 

இதனை தொலைவிலிருந்தே கவனித்த ஒரு தமிழ் இளைஞன் அங்கு வந்து நடந்ததை கேட்டுள்ளார் இந்தோனேஷியா தொழிலாளி எதுவும் கூறாத நிலையில் ஆத்திரமடைந்த தமிழ் இளைஞர் பளார் பளார் என்று நான்கு அறை கொடுத்துள்ளார்.

தமிழக இளைஞன் இந்தோனேசியா தொழிலாளியை கன்னத்தில் அறைந்த இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.

 

பின்னர் தான் என்ன காரணம் என்றே இந்திய தொழிலாளியிடம் வினவியுள்ளார். அதற்கு இந்திய தொழிலாளி நான் சரியாக வேலை செய்யவில்லை என முதலாளியிடம் கூறி தன்னை வேலையை விட்டு நீக்கி விடுவேன் என்று கூறி இந்தோனேஷியா தொழிலாளி மிரட்டினார் என தெரியவந்தது.

கன்னத்தில் அறைந்த அந்த இளைஞன் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் அவர் யாரிடமும் எதற்காகவும் பணிந்து போகாதீர்கள் தன்மானத்தை விட்டு ஒரு வேலை செய்ய வேண்டுமெனில் அந்த வேலையை உங்களுக்குத் தேவையில்லை என அறிவுரை கூறி கவர்ந்துள்ளார்.

 

தன்மானம் என்பது உடை போன்றது அதை இழந்தால் அவமானம் தான் மிஞ்சும் எங்கு சென்றாலும் தமிழர்களின் வீரமும் சரி கோபமும் சரி பறை சாற்றபடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பது இந்த சம்பவத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

இதை பல்வேறு தரப்பினரும் ஆதரித்து தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.