தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் பெருமிதம்!! கணவனை இழந்த பெண்களுக்கு சிறப்பு நலத்திட்டங்கள் அறிவிப்பு!!

Photo of author

By Gayathri

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் பெருமிதம்!! கணவனை இழந்த பெண்களுக்கு சிறப்பு நலத்திட்டங்கள் அறிவிப்பு!!

Gayathri

Proud in the statement released by the Tamil Nadu government .. Announcement of special welfare schemes for women who have lost their husbands ..

கடந்த அக்டோபர் 22ஆம் தேதி கைம்பெண்களின் கண்ணீரை துடைப்பது எப்போது? என்ற தலைப்பில் “இந்து தமிழ் திசை” என்ற நாளிதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது. இதற்கு தமிழக அரசு தரப்பில் கைம்பெண்களுக்கான பல நலதிட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதல்வர் மு க ஸ்டாலின் இதற்கான நிதியை ஒதுக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டங்களின் மூலம் பல்லாயிரக்கணக்கான கைம்பெண்கள் பயன் பெற்று வருவதுடன், சமூக பாதுகாப்பு திட்டங்களின்கீழ் உயர்த்தப்பட்ட மாதஓய்வூதியம் ரூ.1,200-ஐ இதுவரை 8 லட்சத்து 10,985 கைம்பெண்கள் பெற்று வருகின்றனர்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் திருமணமாகாத பெண்கள், கணவனை இழந்த பெண்கள், திருநங்கைகள் மாதாமாதம் ரூ.1000 உதவித்தொகை பெற்று வருகின்றனர்.

மேலும், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்கள் உள்ளிட்டோருக்காக தமிழக அரச நல வாரியம் உருவாக்கியுள்ளது.இதில் 21,344 பேர் உறுப்பினராகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.