உடல் எடை குறைய இதை பயன்படுத்திப் பாருங்கள்!! சூப்பரான ரிசல்ட் கிடைக்கும்!!

Photo of author

By Selvarani

உடல் எடை குறைய இதை பயன்படுத்திப் பாருங்கள்!! சூப்பரான ரிசல்ட் கிடைக்கும்!!

உடல் பருமன் உடலில் உண்டாகும் பல்வேறு ஆபத்தான நோய்களுக்கு காரணமாக அமைகிறது. எடை குறைப்பு என்பது அலகு சார்ந்தது மட்டுமல்லாமல் ஆரோக்கியம் சார்ந்தது என்ற விழிப்புணர்வு அதிகமாகவே மக்களிடம் இருக்கிறது. உடல் எடையை குறைப்பதற்கு திரவ உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவிதமான திரவப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

தண்ணீர் உடல் எடையை குறைப்பதற்கு மிகுந்த உதவி புரிகிறது. குறிப்பாக நம்முடைய உடலில் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கும் உதவி செய்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற துணை புரிகிறது. தண்ணீரில் கலோரிகள் கிடையாது என்பதால் கொழுப்புகளை வேகமாக கரைத்து வெளியேற்ற உதவி செய்யும். உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். உடல் எடையை குறைக்க ஒரு பானம் ஒன்றை தயார் செய்யும் முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. பட்டை- 1

2. லவங்கம் -2

3. சீரகம்- 1/2 ஸ்பூன்

4. இஞ்சி

5. கொத்தமல்லி- 1/2

6. தண்ணீர்- 1 கப்

செய்முறை:

ஐந்து பொருட்களையும் ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக சுண்டியதும் அடுப்பை அணைத்துவிட்டு தண்ணீரை சிறிது ஆறவிடவும்.

பயன்படுத்தும் முறை:

இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம் அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம்.

இந்த பானத்தை இரவு நேரங்களில் உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து குடித்து வருகையில் உடல் எடை வெகு விரைவில் குறைந்து வரும்.

இந்த பானத்தை உட்கொள்வதன் மூலம் உங்கள் உடலில் உடல் எடை குறைய தொடங்கும். மேலும் இன்னும் எதற்கு சக்தி மிகவும் பலமடையும்.