சிறுமியை விட்டு வைக்காத சைக்கோ ஆசாமி! பாய்ந்தது போக்சோ!

Photo of author

By Hasini

சிறுமியை விட்டு வைக்காத சைக்கோ ஆசாமி! பாய்ந்தது போக்சோ!

பெண்களை ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்களாகவே எப்போதும் ஆண்களில் ஒரு சிலர் திகழ்கின்றனர்.சிறு வயது முதல் அது அப்படியே அவர்கள் மனதில் ஊற வைக்கப்பட்டிருக்கும் போல.

அப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடந்தேறி உள்ளது.சென்னை தண்டையார் பேட்டயை சேர்ந்த சரத் குமார் வயது(20)மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறான்.

அதே பகுதியை சேர்ந்த சிறுமி சங்கீதா(வயது16)(பெயர் மாற்றப்பட்டது) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.அது கால போக்கில் காதலாக மாறி உள்ளது.

அதனால் சரத் குமார் அந்த சிறு பெண்ணிடம் நாம் இருவரும் திருமணம் செய்யலாம் எனவும் சொந்தமாக படகு வாங்கி மீன்பிடி தொழிலை தொடங்கலாம் எனவும் ஆசை வார்த்தை கூறி உள்ளான்.

இதை நம்பிய சிறுமியோ அவனை நம்பி திருமணம் செய்ய ஒப்புக்கொண்டு கடந்த 10 ம் தேதி திருமணம் செய்துள்ளனர்.இதனை தொடர்ந்து தனக்கு விதவிதமாக சமைத்து தரவேண்டும் என்றும், அதை தான் சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளான்.

அதற்க்கு அந்த சிறுமியோ நான் கற்றுக்கொண்டு உனக்கு சமைத்து தருவதாக கூறியுள்ளாள்.உடனே அந்த சைகோ இளைஞன் சமைக்க தெரியாத உன்னை வைத்துக்கொண்டு நான் எப்படி விதவிதமாக சாப்பிட முடியும் என்று ஆத்திரமடைந்து மீன் வெட்டுவதை போல் அந்த சிறுமியை கை மற்றும் கால்களில் சரமாரியாக வெட்டி உள்ளான்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்,பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் இருந்த சிறுமியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.இதனை தொடர்ந்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் காரணமாக சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த சரத் குமார் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது தாய் இருவரையும் கைது செய்து சிறுமியை துன்புறுத்தியதாக கூறி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.