பள்ளி மாணவர்களை சுட்ட சைக்கோ கொலையாளி!  வலைவீசி தேடிவரும் போலீஸ்!

Photo of author

By Rupa

பள்ளி மாணவர்களை சுட்ட சைக்கோ கொலையாளி!  வலைவீசி தேடிவரும் போலீஸ்!

அமெரிக்கா வாஷிங்டன் சிகாகோ என்ற பகுதியில் ஓர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்ப பள்ளிக்கு அருகே ஓர் ஐஸ்கிரீம் கடை உள்ளது. பள்ளி மாணவர்கள் அவ்வபோது இடைவெளி விடும் வேலையில் ஐஸ்கிரீம் கடைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் மதிய நேரத்தில் மாணவர்கள் பலர் அந்த ஐஸ்கிரீம் கடையில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம  நபர் தன் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த மாணவர்களை சரமாரியாக சுட்டுள்ளான்.

இந்த துப்பாக்கி சூட்டில் நான்கு சிறுவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஒரு சிறுவர் மட்டும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளான். அந்த மர்ம நபரை அங்கிருந்த பொதுமக்கள் பிடிக்க சென்ற போது அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டான். எந்த ஒரு காரணம் இன்றி  மர்ம ஆசாமி இவ்வாறு நடந்து கொண்டதால் இவன் சைக்கோ கொலையாளியாக இருப்பானோ என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த துப்பாக்கி சூட்டினால் சிகாகோ மாகாணம் சற்று பரபரப்பாகவே காணப்படுகிறது.