எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கும் இரு துருவங்களுக்கு இடையே ஒரு பூங்கொத்து!

0
130

தமிழகம் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நிதி துறை சம்பந்தமான இரண்டு நாள் பயணமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றையதினம் சென்னை வந்தடைந்தார். மத்திய மறைமுக மற்றும் நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் வருமானவரித் துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை செய்த நிர்மலா சீதாராமன், மாலைநேரத்தில் வருமான வரி அதிகாரிகள் குடியிருப்பான சிகரம் அடுக்குமாடி கட்டிடத்தை தொடங்கி வைத்தார்.

சென்னையில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 243.48 சதுர மீட்டர் பரப்பளவில் குடியிருப்புகள் கட்டப்பட்டு இருக்கின்றன. சிகரம் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கின்ற இந்த குடியிருப்பு வளாகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வருவாய் செயலாளர் பஜாஜ், மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர், வருமான வரித்துறை தலைமை ஆணையர், டிசி பட்வாரி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதற்கு முன்னதாக சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் மாநில நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். சமீபத்தில் ஜிஎஸ்டி சீர்திருத்த கவுன்சிலில் டிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒரு உறுப்பினராக அறிவித்திருந்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு இதற்கு முன்னரே தன்னுடைய வலைதள பக்கத்தில் நன்றியை தெரிவித்து இருக்கின்ற பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று நேரிலும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

Previous articleஸ்பெயினில் வெடித்த எரிமலை! கடலில் கலந்த திரவம்! எழுந்த புகைமண்டலம்!
Next articleஇந்த மனுக்கள் ஏன் விசாரிக்க படாமல் உள்ளது? உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பிய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்!