சீமானுக்கு பிடிவாரண்ட்.. இனியும் பொறுக்க முடியாது!! நீதிபதி பரபர உத்தரவு!!

0
8

NTK: நாம் தமிழர் கட்சியினருக்கும் டி ஐ ஜி வருண்குமாருக்கும் இடையே வார்த்தை போர் முற்றி அது நீதிமன்றம் வந்தடைந்தது. அதாவது நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போது சீமான் பேசிய ஆடியோ ஒன்றை இவர் வெளியிட்டதாக கூறி, ஒருமையில் தகாத வார்த்தைகளால் சீமான் பேசியுள்ளார். மேற்கொண்டு அவரது குடும்ப உறுப்பினரையும் அவ்வாறு பேசியதால் பொறுக்க முடியாமல் இது ரீதியாக நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் வருண் குமார் மனு அளித்தார்.

தொடர்ந்து இந்த வழக்கானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை முடிந்த பாடில்லை. ஏனென்றால் ஒவ்வொரு முறை வழக்கு அமர்வுக்கு வரும்போதெல்லாம்  முறையாக சீமான் வருவதில்லை. மாறாக தனது வழக்கறிஞரையே அனுப்பி வைக்கின்றார். கடந்த முறை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு அமர்வுக்கு வந்த போது சீமான் ஏப்ரல் ஏழாம் தேதிக்குள் ஆஜராகவில்லை என்றால் கட்டாயம் பிடிவாரண்ட் கொடுக்கப்படும் என்று எச்சரித்தனர். அந்த வகையில் சீமான் எட்டாம் தேதி ஆஜராகி இது ரீதியாக விளக்கம் கொடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் வழக்குகளிலும் சீமான் வரவில்லை. அந்த வகையில் இம்முறையும் வராததால் சீமான் வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு முறையும் இதை போல தான் ஏதேனும் காரணம் சொல்லி மலுப்புகிறீர்கள். கடந்த முறையே கட்டாயத்தினால் தான் சீமான் வர நேர்ந்தது, இனி வரும் நாட்களிலும் இது போல் நடந்து கொள்ளக் கூடாது என்று எச்சரித்துள்ளார். மீண்டும் இந்த வழக்கு அமர்வுக்கு வரும்போது சீமான் ஆஜராகவில்லை என்றால் கட்டாயம் பிடிவாரண்ட் கொடுக்கப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Previous articleஒட்டுமொத்தமாக கட்டுமரம் கவிழப்போகுது.. எடப்பாடி போட்ட லிஸ்ட்!! கலக்கத்தில் திமுக!!
Next articleஇவர்களுக்கெல்லாம் ரூ 1000 கிடைக்காது.. திமுக நடத்தும் பித்தலாட்டம்!! வெட்ட வெளிச்சமான உண்மை!!