பொதுமக்களுக்கு உஷார்!! பிற்பகல் ஒரு மணி வரை இந்த மாவட்டங்களில் கனமழை!!

0
106
Public alert!! Heavy rain in these districts till 1 o'clock in the afternoon!
Public alert!! Heavy rain in these districts till 1 o'clock in the afternoon!

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அது சூறாவளி புயலாக உருமாறி தமிழகத்தின் கடலோர பகுதிகளை நெருங்க உள்ளது. இதனால் பிற்பகல் ஒரு மணி வரை குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக உருமாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள சூழ்நிலையில் அதற்கு பெங்கல் என சவுதி அரேபியா பெயரிட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாக்கியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று இரவு இது பெங்கல் புயலாக மாறியதும் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்க உள்ளது.

மேலும் இந்த புயலால் சென்னைக்கு அதிக பாதிப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த புயல் சென்னை புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புயலானது கரையை நெருங்கும் சமயத்தில் பலத்த தரைக்காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்க கடலில் உருவான இந்த பெங்கல் புயல் கரையை கடக்கும் முன்னரே வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலின் காரணமாக கடலூர் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் அதிக கனமழையும் சில இடங்களில் கனமழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த இரண்டு மாவட்டங்களிலும் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல தமிழகத்தின் சுமார் 15 மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை விழுப்புரம் செங்கல்பட்டு கடலூர் மயிலாடுதுறை நாகை திருவாரூர் புதுக்கோட்டை சிவகங்கை தூத்துக்குடி ராமநாதபுரம் தென்காசி நெல்லை கன்னியாகுமரி தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Previous article9ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த பெண் குழந்தை!! தந்தையான 15 வயது சிறுவன் அதிர்ச்சி சம்பவம்!!
Next articlecsk அணியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய குழப்பம்!! சோகத்தில் தத்தளிக்கும் ரசிகர்கள்!!