பொதுமக்களுக்கு அலர்ட்!! தமிழகத்தை குறி வைத்த பாகிஸ்தான்.. அடுத்த தாக்குதல் இந்த பகுதியில் தான்!?

Photo of author

By Rupa

பொதுமக்களுக்கு அலர்ட்!! தமிழகத்தை குறி வைத்த பாகிஸ்தான்.. அடுத்த தாக்குதல் இந்த பகுதியில் தான்!?

Rupa

Public Alert!! Pakistan has targeted Tamil Nadu.. The next attack will be in this area!?

India Pakistan: காஷ்மீரில் பகல்ஹாம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ராணுவ அதிகாரி உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து உலக நாடுகள் அனைவரும் இது ரீதியாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியா உடனடியாக பாகிஸ்தான் மீது போர் தொடுக்காமல் ஆரம்ப கட்டத்தில் சிந்து நதி நீர், விசா வழங்குவதில் நிறுத்தம் போன்றவற்றை மேற்கொண்டது.

அச்சமயமே பாகிஸ்தான் தங்கள் எதிர்ப்பை காட்டுவதாக தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இவை நம் இந்திய அப்பாவி மக்கள் உயிரிழந்ததற்கு வழங்கிய நீதி என்று சமூக வலைத்தளம் எங்கும் கூறினர்.

பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாக இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது ரீதியாக பகிரங்க வீடியோவையும் வெளியிட்டது. அதில் நீங்கள் எங்கு இருந்தாலும் நாங்கள் உங்களை கண்டுபிடித்து அழிப்போம் என்ற பாணியில் தான் அது அமைந்தது. மேற்கொண்டு இந்தியாவின் சினிமா துறை மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் ஆபரேஷன் சிந்தூருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இப்படி இருக்கையில் கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தான் இந்தியாவின் எல்லையில் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனை இந்திய ராணுவம் வான் வழியிலேயே தடுத்து வருகிறது. இப்படி இருக்கையில் தற்போது பஞ்சாப் வரை இதன் தாக்கம் நீட்டித்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் ஒவ்வொரு மாநிலத்திலுள்ள முக்கிய இடங்களை குறி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்டவற்றை டார்கெட் செய்துள்ளதாம். அதனால் இந்த பகுதிகளை சுற்றி பெரிய அளவில் ராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.