பொதுமக்கள் கவனத்திற்கு! மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு குறித்து முக்கிய தகவல்!
இலவச மானியம் மின்சாரம் பெறுவதில் ஒழுங்கு முறையை கொண்டு வருவதற்காகவும், முறைகேடுகளை தகர்க்கவும் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு இணைக்க வேண்டும் என்ற கட்டாயம் ஆக்கியுள்ளனர்.
மேலும் இம்மாதம் இறுதிவரை இதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.இதில் பல கட்சிகள் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.அதுமட்டுமின்றி நுகர்வோர்கள் இந்த ஆதாரை இணைத்தால் மட்டுமே வரும் நாட்களில் மின் கட்டணம் செலுத்த முடியும் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க புதிய ஒரு இணையத்தை அறிமுகம் செய்துள்ளனர்.அந்தவகையில் மக்கள் இனி இந்த இணையத்திலும் ஆதார் எண்ணை, மின் இணைப்புடன் இணைத்துக் கொள்ளலாம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
இம்மாதம் இறுதிவரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தினம் தோறும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் வேளையில், அடிக்கடி சர்வர் பிரச்சனை ஏற்படுவதால் புதியதோர் இணையத்தை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இனி வரும் நாட்களில் பொதுமக்கள் bit.ly/linkyouraadhar இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர். இத்தோடு ஆதார் நகலை பதிவேற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை எனவும் அதற்கு மாறாக ஆதார் எண்ணை மட்டும் பதிவு செய்தால் போதுமானது என்றும் கூறியுள்ளனர்.
இன்று மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதை ரத்து செய்யும்படி நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கானாது விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.