ATM: நமது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சில முக்கியமான நிதி மாற்றங்கள் நடைமுறையில் வரத் தொடங்கியுள்ளன. வங்கி பரிவர்த்தனை கட்டணங்கள், வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் மற்றும் வருமான வரி தாக்கல் நேரத்துடன் தொடர்புடைய கட்டுப்பாடுகள் போன்றவை இதில் அடங்கும்.
முதலில், ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன. அதிகமான இலவச பரிவர்த்தனைகள் எதிர்காலத்தில் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை இதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம். குறிப்பாக, வாடிக்கையாளர்கள் தங்கள் இலவச வரம்பை மீறினால், ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ₹23 வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பல வங்கிகள் இதற்கான அறிவிப்புகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளன.
அதன்படி பஞ்சாப் நேஷனல் வங்கியும் வரும் 9 ஆம் தேதி முதல் வரம்பை மீறி ஏடிஎம் மூலம் பரிவர்த்தனை செய்தால் ரூ 21 ஆகவும், இருப்பை பார்க்கும் பட்சத்தில் ரூ 11 வசூல் செய்யப்படும் என கூறியுள்ளனர்.
அடுத்து, வீட்டுக்கடன்கள் மற்றும் பிற கடன்களுக்கான வட்டி விகிதங்களில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6% ஆக குறைத்துள்ளது. இது தற்போதைய வீட்டுக்கடன் தவணைகளில் சற்று நிவாரணம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வங்கிகள் இந்த மாற்றங்களை உடனடியாகப் பயன்படுத்துமா என்ற கேள்வி உள்ளது.
மேலும், வருமான வரி தாக்கலுக்கான முதலீட்டு சான்றுகள், வாடகை ரசீதுகள், வங்கி வட்டி அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களை சர்ப்பிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆவணங்களை தாமதமின்றி தாக்கல் செய்வதன் மூலம் அபராதங்களைத் தவிர்க்க முடியும்.