பொதுமக்களே உஷார்! மீண்டும் அதிவேகமாக பரவிவரும் காய்ச்சல்!! ஒரே நாளில் 2292 பேருக்கு பாதிப்பு வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! 

0
92
Public beware! The fever is spreading fast again!! Shocking news that 2292 people were affected in one day!!
Public beware! The fever is spreading fast again!! Shocking news that 2292 people were affected in one day!!

பொதுமக்களே உஷார்! மீண்டும் அதிவேகமாக பரவிவரும் காய்ச்சல்!! ஒரே நாளில் 2292 பேருக்கு பாதிப்பு வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! 

மீண்டும் காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நமது அண்டை நாடான வங்காள தேசத்தில் ஒரே நாளில் 2292 பேர் டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் வங்காள தேசத்தின் சுகாதார சேவைகளுக்கான பொது இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்தியில் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையில் கடந்த 24 மணி நேரத்திற்குள் மொத்தம் சுமார் 2292 பேருக்கு டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நோயாளிகள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய நோயாளிகளில் 1064 பேர் டாக்கா நகரில் உள்ள மருத்துவமனைகளிலும், மற்ற நோயாளிகள் வேறிடங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தற்போதைய டெங்கு பாதிப்புக்கு சுமார் 9 பேர் உயிரிழந்தனர்.  இதன் காரணமாக மொத்த உயிரிழப்பு 176 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வங்காளதேசத்தில் மொத்தம் 7,175 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 4,149 பேர் டாக்காவில் உள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலால் நடப்பு ஆண்டில் இதுவரை 32,977 பேர் பாதிக்கப்பட்டு சுமார் 25,626 பேர் குணமடைந்தும் உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

கடந்த 2019-ம் ஆண்டில் 179 பேர் உயிரிழந்த நிலையில், 2022-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 281 ஆக உயர்ந்தது. எனினும் நடப்பு ஜூலையில் இந்த பாதிப்பு மிகவும்  மோசமடைந்து உள்ளது. கடந்த 21 நாட்களில் 109 பேர் உயிரிழந்தும், 20,465 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டும் உள்ளது. வருகிற ஆகஸ்டு மற்றும் செப்டம்பரில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. 

Previous articleவாகன முகப்பு விளக்குகளில் “கருப்பு ஸ்டிக்கர்”!! விழிப்புணர்வை ஏற்படுத்தும் போக்குவரத்து காவல்துறையினர்!!
Next articleபுதிய மாற்றங்களுடன் களமிறங்க உள்ள “ட்விட்டர்”!! எலான் மஸ்க் திடீர் முடிவு!!