தமிழகத்தில் வரும் நவம்பர் 4ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் வியாழன், வெள்ளி, சனி ஞாயிறு என அந்த வாரம் முழுக்க பல இடங்களில் விடுமுறை விடப்படுகிறது.
இதனால் பொது மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையானது மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும்.
பட்டாசு, பலகாரம்,புத்தாடை, புதுப்படம் என அன்றைய நாள் ஒரு திருவிழா போல இருக்கும்.
தமிழக அரசு எப்போதும் பொங்கல் மற்றும் தீபாவளிக்கு மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் விநியோகிக்கப்படும்.
இந்த வருட தீபாவளிக்கு 4ஆம் தேதிக்கு முன்னரே ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளது.
இதனால் நவம்பர் மாதம் 1,2,3 தேதிகளில் தொடர்ந்து ரேஷன் கடைகள் செயல்பட திட்டமிடப்பட்டு இருக்கிறது.
தொடர்ந்து 3 நாட்கள் ரேஷன் கடைகள் செயல்பட இருப்பதால் நவம்பர் 6 சனிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.