மலைபுறம்போக்கு நிலத்தில் வெளியூர் மக்களுக்கு பட்டா வழங்குவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!!

Photo of author

By Rupa

மலைபுறம்போக்கு நிலத்தில் வெளியூர் மக்களுக்கு பட்டா வழங்குவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை அடுத்த கொண்டகுப்பம் கிராமத்தில் உள்ள மலைபுறம்போக்கு நிலத்தை வெளியூர் மக்களுக்கு பட்டா வழங்க வருவாய்த்துறை முயற்சிப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

லாலாப்பேட்டை அடுத்த கொண்டக்குப்பம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் வனத்துறைக்கு அருகில் மலைப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் வெளியூர் பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறை அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை கண்டித்து கிராமமக்கள் அந்த இடத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் அளித்த உத்தரவாதத்தின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.