10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!! மத்திய அரசு அறிவித்த சூப்பர் வேலை!!

Photo of author

By Sakthi

JOB:மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பினை அறிவித்து இருக்கிறது.

மத்திய அரசின் பொதுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் 10 வகுப்பு முடித்தவர்களுக்கு 71 காலிப்பணியிடங்களை அறிவித்து இருக்கிறது. இந்த கப்பல் கட்டும் தளம் 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இதில் கப்பல் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத நிறுவத்தில் தான் வேலை வாய்ப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த நிறுவனத்தில் சாரம் அமைப்பவர்  பணிக்கு (Scaffolder) – 21 பணியிடங்களும் செமி ஸ்கில்டு ரிக்கர்-50 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சாரம் அமைப்பவர்கள் குறைந்தது மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 10 ஆண்டுகள் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

 மாற்று திறனாளிக்கு 13 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு  முதல் ஆண்டில் ரூ.22,100 இரண்டாம் ஆண்டு ரூ.22,800 , மூன்றாம் ஆண்டு ரூ.23,400 சம்பளமாக வழங்கப்படும். இப் பணிகளுக்கு எழுத்து தேர்வு எதுவும் கிடையாது விண்ணப்பங்கள் சரிபார்ப்பு மற்றும் உடற்த் தேர்வு மருத்துவப்  பரிசோதனை நடைபெறும்.

பணியாளர்கள் தேர்வு  உடற் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.. https://cochinshipyard.in/ என்ற இணைய தளம் வழியாக விண்ணபிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ 200 ஆகும்.  விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்று தொடங்கி(13.11.2024 முதல் 29.11.24) வரை உள்ளது. இந்த வேலை வாய்ப்பு பற்றி செய்திகளை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். ஏழை எளிய வேலை இல்லாதோர் பயன் அடைவார்கள்.