உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய குறைகளை தீர்த்த பொதுப்பணித்துறை அமைச்சர்!! மகிழ்ச்சி வெள்ளத்தில் தொகுதி மக்கள்!!

Photo of author

By Savitha

தொகுதி மக்களை நேரில் சந்தித்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய குறைகளை தீர்த்து வைத்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு.

திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட நவம்பட்டு, கல்லொட்டு, வேளையம்பாக்கம், பழையனூர் மற்றும் கண்டியாங்குப்பம் ஆகிய ஊராட்சிகளில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பொதுமக்களை நேரில் சந்தித்து பொது மக்களின் குறை தீர்வு மனுக்களை பெற்றார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் தனது தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சிகளில் பொது மக்களை ஒவ்வொரு மாதம் நேரில் சந்தித்து குறை தீர்வு மனுக்களை பெற்று வருகிறார்.

அந்த வகையில் இன்று திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட நவம்பட்டு, கல்லொட்டு, வேளையம்பாக்கம், பழையனூர், கண்டியாங்குப்பம் ஆகிய ஊராட்சிகளில் பொது மக்களை நேரில் எஎசந்தித்து பொதுமக்கள் அளித்த பட்டா சிட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிக்கான உதவிகள் கோருதல், ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அவர்கள் பொதுமக்களிடம் நேரில் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றார்கள்.

பொதுமக்கள் அளித்த குறைவு மனுக்களை பெற்ற அமைச்சர் வேலு அவர்கள் எந்தெந்த மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமோ அந்தந்த மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அந்த மனுக்களின் மீதான குறைகளை தீர்த்து வைத்தார்.

இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்குதல், காது கேளா கருவி வழங்குதல், பட்டா சிட்டா மாறுதல் ஆகிய குறைகள் தீர்க்கப்பட்டு உடனடியாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.