மருத்துவமனையில் இருந்து விடைபெற்றார் புதுவை முதல்வர் ரங்கசாமி!

Photo of author

By Sakthi

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி நோய்தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவருக்கு சிகிச்சை முடிவுற்ற பின்னர் இன்று அவர் வீடு திரும்பியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக பாட்டாளி மக்கள் கட்சி, என் ஆர் காங்கிரஸ் கூட்டணி அமைத்து 16 தொகுதிகளில் வெற்றி அடைந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 7ஆம் தேதி ரங்கசாமி புதுச்சேரியின் முதலமைச்சராக பொறுப்பேற்றார் .இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, கடந்த 29 ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரங்கசாமி சிகிச்சையில் இருந்து வந்தார். ஒரு வாரத்திற்குப் பின்னர் இன்றைய தினம் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வீடு திரும்பியிருக்கிறார்.

இதற்கிடையில் மருத்துவமனையில் இருந்த ஒரு வார காலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நமச்சிவாயம் தலைமையில் இன்று தலைமைச் செயலாளருக்கு நோய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்து அதனை தொடர்ந்து மே மாதம் 15ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டசபை உறுப்பினர்கள் தலைமையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை சந்தித்தார்கள். சட்டசபை உறுப்பினர்களாக பதவியேற்பதற்கு முன்னர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வெற்றியடைந்தவர்கள் தலைமைச் செயலாளரை சந்தித்து எவ்வாறு ஆலோசனை கூட்டம் நடத்தலாம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநரிடம் திமுக கோரிக்கை வைத்திருக்கிறது.

இந்த நிலையில், நேற்றைய தினம் உருளையன்பேட்டை சட்டசபை தொகுதியில் வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளர் வேலூர் அரசு மருத்துவமனையில் இருக்கின்ற வாழ்த்துக்கள் நாடுகளுக்குச் சென்று நோயாளிகளைச் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதிய அளவு மருந்தும் சிகிச்சையும் இல்லை என அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

முதலமைச்சர் ரங்கசாமி நோய்த் தொற்று சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், இன்றைய தினம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு மருத்துவர் என்ற விதத்தில் டிபி உடை அணிந்தவாறு கதிர்காமத்தில் இருக்கின்ற இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து நோய்த்தொற்று வார்டுகளில் இருக்கின்ற நோயாளிகளை சந்தித்தார். அதன் பின்பு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் மருத்துவர்களிடம் சிகிச்சை தொடர்பான தேவையான அனைத்தையும் அவர் கேட்டறிந்த பின்னர் ஆளுநர் மாளிகைக்கு சென்று இருக்கிறார்.

புதுவை அரசின் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் யார் என்ற கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மருத்துவமனையில் இருந்ததன் காரணமாக, பதில் கிடைக்காமல் இருந்தது. இன்றைய தினம் முதலமைச்சர் ரங்கசாமி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி இருக்கின்றார். இந்த நிலையில், இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று புதுவை அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.