நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவை சார்ந்தவர்களா? புதுச்சேரியில் வெடித்தது சர்ச்சை!

Photo of author

By Sakthi

மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக என்று குறிப்பிட்ட தற்காக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு புதுச்சேரி மாநில அரசின் கொறடா அனந்தராமன் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்த போது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத நியமன சட்டமன்ற உறுப்பினர்களை கட்சி ரீதியாக ஏற்றுக் கொள்ள இயலாது. பொறுப்பு ஆளுநர் தமிழிசை அவர்கள் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக என்று குறிப்பிட்டு இருப்பது தவறு. 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களை கட்சி ரீதியாக அடையாளப் படுத்துவது தவறு இது சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிவித்திருக்கிறார். புதுச்சேரியை சேர்ந்த மூன்று புதிய நியமன சட்டமன்ற உறுப்பினர்களை கட்சி சார்ந்து குறிப்பீடு செய்யாமல் அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான வாய்ப்பு சட்டப்படி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் பெயரை குறிப்பிட்டு பாஜக என்று தெரிவிக்க எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. மூவரும் சட்டரீதியாக கட்சி சார்பாக அங்கீகரிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் கிடையாது. மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த கட்சியை சார்ந்தவர்கள் என்று தெரிவிப்பது சட்டத்திற்கு அப்பால் பட்டது எதிர்க்கட்சியில் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் அதோடு அதிமுகவின் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக 3 சட்டமன்ற உறுப்பினர்கள் என்று பலம் இருக்கிறது என்று நாராயணசாமிக்கு தமிழிசை சவுந்தரராஜன் கடிதம் எழுதி இருக்கிறார்.

மத்திய அரசால் நியமிக்கப்படும் நியமன சட்டமன்ற உறுப்பினர்களை பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் என்று தெரிவிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒன்று. ஆகவே வாக்களிக்க அதிகாரம் இருக்கிறது என்று நீதிமன்றம் தெரிவித்தாலும் பாஜகவை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் என்று துணைநிலை ஆளுநர் தெரிவிப்பதே தவறு என தெரிவித்திருக்கிறார்.