புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தனர். இந்த கள்ளச்சாராயம் புதுச்சேரி பகுதியில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் கலால்துறைக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் குற்றச்சாட்டு ஏதிரொலியாக புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகரை பணியிட மாற்றம் செய்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக சமூக நலத்துறை இயக்குனர் குமரனுக்கு கலால்துறை துணை ஆணையர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.