புதுச்சேரி – சென்னை போக்குவரத்து சேவை நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகத்தில் மாடசு புயல் காரணமாக கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுத்து மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்துள்ளனர். இந்த சூழலில் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதித்துள்ள நிலையில், இன்று இரவு தான் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே புயல் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த புயல் காரணமாக சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருவதால் அந்த மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது.
இது குறித்த போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாடஸ் புயல் கரையை கடக்கும் நேரம் மட்டும் குறிப்பாக மாமல்லபுரத்தில் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து சேவை நிறுத்தம் செய்யப்படும் மற்ற பகுதிகளில் வழக்கம் போல் இயங்கும் என்று கூறியிருந்தார்.
அந்த வகையில் இன்று இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே கரையை கடக்க உள்ளதால் பாண்டிச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை வழியாக செல்லும் சென்னை மற்றும் காரைக்கால் பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று இரவு மான்டஸ் புயல் ஆனது கரையை கடந்த பிறகு வழக்கம் போல் புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை வழியாக செல்லும் சென்னை மற்றும் காரைக்கால் பேருந்துகள் செயல்படும் என்று கூறியுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் சென்னை மற்றும் காரைக்கால் செல்ல இருந்தால் ஒன்றானது இரண்டு நாள் கழித்து செல்லும்படி அறிவுறுத்தப்பட்டதோடு மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.