பள்ளி மாணவர்களுக்கு கொரோனா! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!

Photo of author

By Parthipan K

புதுச்சேரி பள்ளிகளை சேர்ந்த ஒரு ஆசிரியர் மற்றும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அடுத்த கல்வி ஆண்டு (2020 – 21) தொடங்கிய நிலையில் பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுத்து வருகின்றன.

இதற்கிடையே புதுச்சேரி மாநிலத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கடந்த 8ம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்தப் பள்ளிகளில் பயிலும் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பெற்றோர்களின் விருப்ப கடிதத்துடன் பள்ளிக்கு வந்தனர். இந்நிலையில், புதுச்சேரி நகர அரசுப்பள்ளியின் கணித ஆசிரியைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கணித ஆசிரியை சென்ற 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இதற்கிடையே, வதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் 10ஆம் வகுப்பு மாணவிக்கும், கலப்பேட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் 10ஆம் வகுப்பு மாணவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளி சென்ற ஒரு ஆசிரியை மற்றும் 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.