இரு தரப்பினர் மோதல் காரணமாக நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் தொடக்கம்!!பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோலகல கொண்டாட்டம்!!

Photo of author

By Savitha

இரு தரப்பினர் மோதல் காரணமாக நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் தொடக்கம்!!பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோலகல கொண்டாட்டம்!!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற போது இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலால் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது வாடி வாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன..

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வருடம் தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் அதேபோல இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியானது இன்று நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன இந்த நிலையில் ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பாக நார்த்தாமலை சத்தியமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து கோவில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்படும் அதன் பிறகு தான் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கும் அதே போன்று கோவில் காளைகள் கொண்டுவரப்பட்டு அவிழ்த்து விடப்படும் போது சத்தியமங்கலம் மற்றும் நார்த்தாமலை மக்களிடையே கோவில் காளை அவிழ்த்து விடுவதில் தொடர்பாக மோதல் ஏற்பட்டது இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது ஜல்லிக்கட்டு போட்டி அது நிறுத்தப்பட்டது இதனை தொடர்ந்து தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வாடிவாசல் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வருவாய் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கியது வீரர்கள் உறுதிமொழி ஏற்க ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது பாடி வாசலில் இருந்து காலைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன

பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டிச் சென்றது சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கியது.ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 19-க்கான பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.