அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த புகழேந்தியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி கடந்த ஜூன் மாதம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் அறிவித்தார்கள். இதன் காரணமாக, தன்னுடைய நற்பெயர் மற்றும் அரசியல் பொதுவாழ்வில் களங்கம் விளைவிக்கும் விதத்தில் செயல்பட்டதாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இன்றையதினம் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கின்றது.
இந்த சூழ்நிலையில், இந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தோம் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்ததோடு, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும், ஓபிஎஸ், இபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தார்கள். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு விசாரிக்குமாறு இரண்டு பேரும் நீதிமன்றத்தில் முறையிட்டார்கள்.
இருந்தாலும் இதனை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதி இந்த மனு வழக்கமான பட்டியலுக்கு வரும்போது விசாரணை நடத்தப்படும் விசாரணையின்போது நீதிமன்றத்தில் எதிர்மறையான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதனை எதிர்த்து அப்போது உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்திருக்கிறார்.
அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தி சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக தெரிவித்து கடந்த ஜூன் மாதம் அதிமுக தலைமை அவரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியது. இதனால் ஆத்திரமடைந்த புகழேந்தி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.