லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் புஜாரா அசத்தல்… மூன்று போட்டிகளில் இரண்டு சதம்!!

0
34

 

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் புஜாரா அசத்தல்… மூன்று போட்டிகளில் இரண்டு சதம்…

 

இந்திய அணியின் கிரிக்கெட்டர் சத்தீஸ்வர் புஜாரா அவர்கள் விளையாடியா கடைசி மூன்று லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.

 

இந்திய அணியை சேர்ந்த புஜாரா தற்பொழுது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ராயல் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றார். இந்த தொடரின் நேற்று(ஆகஸ்ட்11) நடைபெற்ற போட்டியில் சோமர்செட் மற்றும் சசெக்ஸ் அணிகள் விளையாடியது.

 

இந்த போட்டியில் முதலில் விளையாடிய சோமர்செட் அணி 50 ஓவர்களின் முடிவில் 318 ரன்கள் குவித்தது. இதையடுத்து 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சசெக்ஸ் அணி 11 பந்துகள் மீதம் இருக்க 319 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சசெக்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய அணியின் புஜாரா அவர்கள் சதம் அடித்து சசெக்ஸ் அணியின் வெற்றிக்கு உதவினார்.

 

புஜாரா சதம் அடித்து 117 ரன்கள் எடுத்து கடைசி வரையில் ஆட்டமிழக்காமல் இருந்தார். சசெக்ஸ் அணிக்காக விளையாடி வரும் புஜாரா கடந்த மூன்று போட்டிகளில் இரண்டாவது முறையாக சதம் அடித்துள்ளார். புஜாரா கடந்த மூன்று போட்டிகளில் 23 ரன்கள், 106 ரன்கள், 56 ரன்கள் எடுத்திருந்தார்.