பாஜக வெளியேறு என்று நாடு முழுவதும் கேட்கின்றது… முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி…

0
40

பாஜக வெளியேறு என்று நாடு முழுவதும் கேட்கின்றது… முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி…

நாடு முழுவதும் பாஜகவே வெளியேறு என்ற முழக்கம் எதிரொலிக்கின்றது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

மணிப்பூரில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நாடு முழுவதும் பாஜகவே வெளியேறு என்ற முழக்கம் எதிரொலிக்கின்றது என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் “பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக கட்சியின் மத்திய அரசு பொது நிதி, ரஃபேல் ஒப்பந்தம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ஊழலில் ஈடுபட்டுள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஊழல் பற்றி பேச முடியாது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆதாரங்கள் எதுவுமே இல்லாமல் எதிர்கட்சிகளின் மீது குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.

நாட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்களை பற்றியோ அவர்களது வாழ்கையை பற்றியோ பாஜக கட்சிக்கும் நரேந்திய மோடி அவர்களுக்கும் கவலை இல்லை. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவை தவறாக வழிநடத்துகின்றார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அவருடைய கட்சியில் உள்ளவர்களின் மீது உள்ள ஊழல் பற்றி பேசுவது இல்லை.

மணிப்பூரில் பிரச்சனையில் ஈடுபட்டவர்கள் மீது மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேற்கு வங்க தேர்தல் நடைபெற்ற பொழுதும் 16 பேர் உயிரிழந்தனர். சுதந்திரப் போராட்டத்தின் பொழுது மகாத்மா காந்தி அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு என்று முழங்கினார்.

அது போலவலே தற்பொழுது நாடு முழுவதும் பாஜகவே வெளியேறு என்ற முழக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கின்றது. நாங்கள் உங்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறவில்லை. ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்று தான் கூறுகின்றோம்” என்று கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் இறுதியாக “பாஜகவே வெளியேறு” என்று கூறினார்.