எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர் புலவர் புலமைப்பித்தன் கவலைக்கிடம்! தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்!

Photo of author

By Parthipan K

எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர் புலவர் புலமைப்பித்தன் கவலைக்கிடம்! தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்!

புலமைப்பித்தன் தமிழில் புகழ்பெற்ற எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.இவர் கோவையில் பிறந்தவர். பாடல் வரிகளுக்காக நான்கு முறை தமிழக அரசின் விருதுகளை இவர் பெற்றுள்ளார்.2001ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு பெரியார் விருது வழங்கி பெருமை செய்தது.

சென்னை அடையாறு போர்டிஸ் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புலவர் புலமைப்பித்தனுக்கு உயிர்காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.பிரபல திரைப்படப் பாடலாசிரியரும் முன்னாள் சட்டசபை துணை தலைவருமான புலமைப்பித்தன் 1968ஆம் ஆண்டு நடிகர் எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானவர்.

தொடர்ந்து நடிகர்கள் சிவாஜி,ரஜினி,கமல் மேலும் தற்போதைய விஜய்,ஜெயம் ரவி வரை ஏராளமான திரைப்படப் பாடல்களை எழுதியிருக்கிறார்.அப்போதைய முதல்வர் எம்ஜிஆரால் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் நியமிக்கப்பட்டார் புலமைப்பித்தன்.சட்டமன்ற உறுப்பினர் குழுவில் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்திருக்கிறார் இவர்.எம்.ஜி.ஆர் எனக்கு அண்ணன் பிரபாகரன் எனக்கு தம்பி புலமைப்பித்தன் என்று இருவருடனுடன் நெருக்கமாக இருந்தவர் புலமைப்பித்தன்.

வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார்.இதையடுத்து அவர் சென்னை நீலாங்கரையில் உள்ள சாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அங்கு அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகவே உடனடியாக சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தற்போது அவருக்கு உயிர்காக்கும் மருத்துவக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றும் மருத்துவமனையின் இயக்குனர் நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.