என் சேலையை இழுத்துவிட்டு அவமானப்படுத்தறாங்க!! ஸ்டாலின் மீது குஷ்பு புகார்!!

0
146
Pull off my saree and humiliate me !! Khushboo complains about Stalin !!
Pull off my saree and humiliate me !! Khushboo complains about Stalin !!

என் சேலையை இழுத்துவிட்டு அவமானப்படுத்தறாங்க!! ஸ்டாலின் மீது குஷ்பு புகார்!!

வரும் சட்ட மன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் அவரவர் தொகுதிகளில் பரப்புரையாற்றி வருகின்றனர்கள். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் தங்களது கட்சிக்காக பொதுமக்களிடையே பல நூதனமுறையில் வாக்குகளை சேகரித்து வருகின்றன்னர்.

இந்நிலையில் திமுக கோட்டை எனப்படும் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில், ஆதிமுகா கூட்டணி சார்பில் பாஜகவின் குஷ்பு போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஆயிரம் விளக்கு தொகுதியில்  திமுக சார்பில் டாக்டர் எழிலன் போட்டியிடுகிறார். ஆயிரம் விளக்கு தொகுதியில் பல முறை திமுக வென்றுள்ளது. கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட குக செல்வம் வென்றார். ஆனால் இந்த முறை குக செல்வம் பஜாக வில் இணைந்துள்ளார். தற்போது குஷ்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றார். மேலும் குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதி உள்ளிட்ட பல தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் புஷ்ப நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது ஸ்டாலின் மற்றும் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

திமுக தொண்டர்கள் தொடர்ந்து இழிவாக பேசி வருகிறார்கள். ஸ்டாலினின் ஆட்கள் வீட்டில் கல்விட்டு அடிக்கிறார்கள், பிரசாரத்தின் போது சேலையை இழுத்து அசிங்கப்படுத்தினார்கள். மேலும்  மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் சந்தித்த அவமானங்களை போலவே நானும் சந்தித்துள்ளேன். வாஷிங் மெஷின் கொடுத்தால் பெண்கள் குண்டாகிவிடுவர்கள் என்று சிலர் கேலி செய்கிறார்கள், உண்மையில் பெண்கள் செய்யும் வேலைகளை ஒரு நாள் செய்துப் பாருங்கள அதில் உள்ள சிரமம் புரியும் என்னுடைய வெற்றி ஜெயலலித்தாவின் வெற்றி என்று கூறினார்.

Previous articleகொரோனா பரவலுக்கு அரசியல்வாதிகள் தான் காரணம்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
Next article”சிதம்பர ரகசியம் போல் என்னிடமும் ஒரு ரகசியம் உள்ளது” – ட்விஸ்ட் வைத்த குஷ்பு