சாம் கர்ரனை தூக்கியது பஞ்சாப்! கிரீஸ் மோரீஸ்சாதனை முறியடிப்பு!
ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் போட்டியின் 16-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக பதிவு செய்யப்பட்ட வீரர்களில் 405 பேரை இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்து பெயர் பட்டியலை வெளியிட்டது. அதில் 87 வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டிய சூழ்நிலையில் அதற்கான மினி ஏலம் தற்போது பிற்பகல் 2:30 மணிக்கு கொச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஏலம் தொடங்கியதும் கேன் வில்லியம்சன் பெயர் முதலில் வாசிக்கப்பட்டு அவரின் அடிப்படை விலை ரூ.2 கோடிக்கு குஜராத் அவரை எடுத்தது. அடுத்து இங்கிலாந்து வீரர் ஹார்ரி புரூக்கை 13.25 கோடிக்கும், மயங்க் அகர்வால் – 8.25 கோடிக்கும் சன் ரைசர்ஸ் அணி எடுத்தது.
சாம் கர்ரன்ஐ எடுக்க முக்கிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வென்று ரூ .18.25 கோடிக்கு தூக்கியது பஞ்சாப் கிங்க்ஸ் அணி. அடுத்து ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு வாங்கியது மும்பை அணி. அடுத்து பென் ஸ்டோக்ஸ் ரூ.16.25 கோடிக்கு சென்னை அணி எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் ரூ.16 கோடிக்கு லக்னோ அணியும் தென்ஆப்பரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென்னை ரூ.5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.
இங்கிலாந்து வீரர் பில் சாலட்டை ரூ.2 கோடிக்கு வாங்கியது டெல்லி அணி. இதுவரை நடந்த முதல் சுற்றில் இலங்கை வீரர் குசல் மெண்டீஸ் ஐ எந்த அணியும் எடுக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டரை ரூ.5.75 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
அடுத்த வீரர்களின் ஏலத்தொகை பின்வருமாறு:
ஆஸ்திரேலியாவின் ரிச்சர்ட்சனை டெல்லி அணி – ரூ.1.5 கோடி
இஷாந்த் சர்மா டெல்லி அணி – ரூ.50 இலட்சம்
இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
ஜெய்தேவ் உனத்கட் லக்னோ அணி – ரூ.50 இலட்சம்
முதல் சுற்றில் ஷம்சி,முஜிப், ஆடம் ஜாம்பா, நியுசி வீரர் ஆடம் மில்னேவ், இங்கிலாந்து வீரர் கிரீஸ் ஜோர்டனை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை. அடுத்த சுற்றில் மீதம் உள்ள வீரர்களின் தேர்வு தெரியும்.