அமெரிக்காவில் வித்யாசமான அமைப்புடன் பிறந்த நாய்க்குட்டி!

Photo of author

By Parthipan K

உலகில் பொதுவாகவே ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதற்கென ஒரு உருவ வடிவமைப்பு இயற்கையாகவே வகுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலே தொடர்ந்து நிகழ் பெற்றுக் (பிறக்கப்பட்டு) கொண்டு வருகிறது.

அதேசமயம், மாற்றங்கள் நிகழும்போது அது காண்போரை வியக்கவைக்கும். உதாரணமாக ஒரு மனிதனின் இருபக்க கைகளிலும் ஐந்து விரல்கள் இருக்கும். ஆனால், லட்சத்தில் ஒருவருக்கு வலப்பக்கமோ அல்லது இடப்பக்கமோ இருக்கின்ற விரல்களில் ஒன்று அதிகமாக (ஆறு விரல்) காணப்படும்.

இவ்வாறு நிகழ்வது மனிதருக்கு மட்டுமல்லாமல் தற்போது ஒரு விலங்கிற்கும் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின், ஒக்லஹோமா என்னுமிடத்தில் நீல் கால்நடை மருத்துவமனையில் ஒரு நாய்க்குட்டி வித்தியாசமான அமைப்புடன் பிறந்துள்ளது. இந்த நாய் குட்டிக்கு ஸ்கிப்பர் என்று பெயரிட்டு உள்ளனர்.

ஸ்கிப்பர் என்று அழைக்கப்படும் இந்த வித்தியாசமான நாய்க்குட்டிக்கு ஆறு கால்கள் உள்ளது, அத்துடன் இரண்டு வால்கள் மற்றும் இரண்டு இடுப்பு பகுதிகளை கொண்டுள்ளது. இது அங்கிருக்கும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘மோனோசெபாலஸ் டிபிகஸ்’ என்று அழைக்கப்படும் பிறவிக் கோளாறு என்று அந்த நாய்க்குட்டியை ஆராய்ச்சி செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.