பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளுக்கு நாய்க்குட்டி பரிசு !!

0
160

நேற்று பிரதமரின் பிறந்தநாளையொட்டி மோப்பநாய் பிரிவை செர்ந்த சிப்பிபாறை இன நாய்க்குட்டியை பாஜக மாநில தலைவரிடம், வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் பிறந்தநாளையொட்டி, தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவில் கொண்டாடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நுழைவுவாயிலில், வழக்கறிஞர்கள் பிரிவின் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் நடந்த விழாவில், மாநில தலைவர் முருகன் மற்றும் நிர்வாகி பங்கேற்றுள்ளனர்.

மேலும், பிறந்தநாளுக்கு கேக் வெட்டியும் ,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
தற்பொழுது பரவி வரும் கொரோனாவை காக்க அக்கட்சி சார்பில் கபசுரக் குடிநீர், முகக் கவசங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் காணொளி மூலம் மக்களிடையே உரையாற்றியபோது, நட்டின நாய்களை பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில், அக்கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவை சேர்ந்தவர்கள், நாய்க்குட்டியை மாநில தலைவர் முருகனிடம், பால்கனகராஜ் வழங்கியுள்ளார் .இந்த நாய்க்குட்டியை போலீஸ் துறையில் மோப்ப நாய் பிரிவில் ஒப்படைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Previous articleதமிழகத்தில் சாதி ஒழிப்பு பெயரளவில் மட்டுமே! நடிகை கஸ்தூரி விளாசல்!
Next articleமாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்! புதியவர் நியமனம்