பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி ஆன்மீகத்திற்கு உரிய மாதமாகும்.இம்மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.காலநிலை மாற்றம் காரணமாக உஷ்ணம் அதிகமாக இருக்கும்.இதன் காரணமாகவே அசைவ உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது.
இம்மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் சனிக்கிழமை நாளில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.இந்த புரட்டாசி மாதத்தில் வரும் திதி,கிழமை,நட்சத்திரம் ஆகியவை சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை மனதார வழிபட்டால் புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
புரட்டாசியில் முதல் சனிக்கிழமையில் சங்கடஹர சதுர்த்தியும்,இரண்டாவது சனிக்கிழமையில் ஏகாதசி மற்றும் கடைசி சனிக்கிழமையில் திருவோண விரதம் உள்ளது.இம்மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதை பலரும் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளுக்கு பூஜை செய்து செய்து வழிபட்டால் கோடி நன்மைகள் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.புரட்டாசி மாதம் புதன் கிரகத்திற்கு உரிய மாதமாகும்.
புதனின் அதி தேவதையாக உள்ள மகா விஷ்ணுவை விரதம் இருந்து வழிபாடு செய்தால் அவரின் அருள் முழுமையாக கிடைக்கும்.புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு நாளும் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டியது முக்கியம்.ஆனால் முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமை நாளில் மாட்டுவது விரதம் இருந்து பெருமாளுக்கு உகந்த நெய்வேத்தியத்தை படைத்து வழிபாடு மேற்கொள்ளலாம்.