வினை தீர்க்கும் புரட்டாசி பவுர்ணமி விரதம்!

Photo of author

By Sakthi

கிருச்ச மத முனிவரின் மகன் பலி தன்னுடைய தந்தையின் சொல்படி விநாயகரை பல்லாண்டு காலமாக கடுமையாக தவம் புரிந்தான் அவனுடைய தவத்தை மெச்சி விநாயகர் அவன் வேண்டி கொண்டபடி மூவாக தாரும் அவனுடைய ஆணைப்படி நடப்பார்கள் என்று வரத்தை வழங்கினார்.

அதோடு மட்டுமல்லாமல் அவன் நினைக்கும் இடமெல்லாம் சென்று வர இரும்பு, வெள்ளி மற்றும் தங்கத்தாலான மூன்று கோட்டை நகரங்களையும் வழங்கினார்.

ஆகவே அவன் திரிபுரான் என்று பெயர் பெற்றான் விநாயகர் இந்த வரங்களை அவனுக்கு கொடுத்த போது ஒரு நிபந்தனையும் அவனுக்கு விதித்தார்.

அதாவது அவன் ஏதாவது ஒரு தவறான காரியங்கள் செய்தால் அவனுடைய மூன்று நகரங்களும் அழிவதுடன் அவனும் சிவபெருமானால் அழிவான் என்றும் தெரிவித்தார். விநாயகரின் வரத்தைப் பெற்றுக் கொண்ட அவன், நாட்கள் செல்ல, செல்ல மூவுலகங்களையும் ஆட்டிப்படைத்து தேவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பல தொந்தரவுகளை தொடர்ந்து வழங்கினான் இதற்கு நிவாரணம் பெறுவதற்காக தேவர்கள் அனைவரும் சிவபெருமானை நாடி வேண்டினார்கள்.

எனவே சிவபெருமான் பலியுடன் போரிட்டு அவருடைய திரிசூலத்தால் அவனை அழிக்கும் போது அவன் அவருடைய திருப்பாதங்களை பற்றியதால் அவருடன் ஒன்றிப் போனான் அவனை சிவபெருமான் அழைத்ததால் அவருக்கு திரிபுராரி என்று பெயர் வந்தது.

சிவனின் பலி வதம், முருகனின் சூரசம்ஹாரம், கிருஷ்ணரின் நரகாசுர வதம் போன்றது என தெரிவிக்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள்.

அவன் வதைக்கப்படும் நேரத்தில் வீடு பேரு பெற்றான் பலி இறையருளால் பலி வீடு பெயர் பெற்ற நாள் ஒரு புரட்டாசி பௌர்ணமி தினமாகும்.

ஆகவே பௌர்ணமி தினத்தன்று சிவபெருமானுக்கு திருவிழா வழிபாடு செய்தாலும், நெய் அல்லது எண்ணெய் திருவிளக்கு ஏற்றினாலும் எந்த காலத்திலும் தீவினை அணுகாது நலம் பெறலாம். அன்று விரதம் இருந்து, ஆலயம் சென்று வில்வார்ச்சனை செய்து தீபம் ஏற்றி சிவ தரிசனம் பெற்று வருவதோடு சிவபுராணம், திருவாசகம், தேவாரப் பாடல்களைப் பாடி வீட்டிலும் சிவபெருமான தியானம் செய்து வழிபட்டால் இல்லத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும்.

புரட்டாசி பௌர்ணமி அன்று சிவபெருமானை காலையில் வழிபட்டால், முற்பிறப்பு தீவினைகள் அனைத்தும் ஒழியும். மதியம் வழிபட்டால், முற்பிறவியோடு இப்பிறவி தீவினைகளும் ஒழியும். மாலை சமயத்தில் வழிபட்டால் 7 பிறவிகள் தோறும் முக்கிய தீவினைகள் எல்லாம் ஒழியும். அத்துடன் நாம் விரும்பிய அனைத்தும் வந்து சேரும்.