“போராட்டம் எல்லாம் செய்தால் நான் ஒரு பைசா கூட தரமாட்டேன்…” – இயக்குனர் பூரி ஜெகன்னாத்!

Photo of author

By Vinoth

“போராட்டம் எல்லாம் செய்தால் நான் ஒரு பைசா கூட தரமாட்டேன்…” – இயக்குனர் பூரி ஜெகன்னாத்!

Vinoth

“போராட்டம் எல்லாம் செய்தால் நான் ஒரு பைசா கூட தரமாட்டேன்…” – இயக்குனர் பூரி ஜெகன்னாத்!

பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன் மற்றும்  பூரி ஜகன்னாத் ஆகியோர் லைகர் படத்தை மிகப் பிரமமண்டமாக தயாரித்தனர். அந்த படத்தை பூரி ஜெகன்னாத்தே இயக்கினார். விஜய் தேவரகொண்டா பாக்ஸ் வேடத்தில் நடிக்க அவரோடு ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே, குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஆகியோர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸானது.

ஆனால் ரிலீஸுக்குப் பிறகு இந்த படம் படுதோல்விப் படமாக அமைந்தது. இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதை திருப்பி தர வேண்டும் என்றும் அவர்கள் கூறிவந்தனர். மிகப்பெரிய நஷ்டம் என்பதால் ஒரு குறிப்பிட்ட தொகையை திருப்பித் தர பூரி ஜெகன்னாத் சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அதற்கு அவர் கால அவகாசம் கேட்டதாகவும், ஆனால் அதற்குள்ளாகவே விநியோகஸ்தர்கள் பூரி ஜெகன்னாத் வீட்டின் முன் போராட்டத்தில் இறங்கப் போவதாகவும் வெளியாகியுள்ளன. இதையடுத்து ஜெகன்னாத் வெளியிட்டுள்ள ஆடியோ “நான் பணத்தை திருப்பி தருவதாகக் கூறினேன். ஆனால் அதற்குள் போராட்டம் என்று வந்தால் என்னிடம் இருந்து ஒரு பைசா கூட வாங்க முடியாது. என்னை பிளாக்மெயில் செய்ய பார்க்கிறீர்களா. இப்படி செய்வதால் நான் ஏன் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு வந்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.