Breaking News

புஷ்பா 2 படத்தில் இணையும் தேசிய விருது பெற்ற நடிகை… லேட்டஸ்ட் தகவல்

புஷ்பா 2 படத்தில் இணையும் தேசிய விருது பெற்ற நடிகை… லேட்டஸ்ட் தகவல்

புஷ்பா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிய படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வந்த இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகி பேன் இந்தியா ஹிட்டானது. இதையடுத்து பாகுபலி படம் போல இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாகியுள்ளது.

முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியால் தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தை 350 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக எடுக்க இருக்கின்றனர் என்றும் தகவல் சமீபத்தில் வெளியானது. மேலும் படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே முதல் பாகத்தில் பஹத் பாசில் வில்லனாக நடித்து மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் பல வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் முக்கியமான காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment