முதல்ல டீசர்… அப்புறம்தான் மெயின் ஷூட்… புஷ்பா 2 டீம் போடும் திட்டம்!

0
180

முதல்ல டீசர்… அப்புறம்தான் மெயின் ஷூட்… புஷ்பா 2 டீம் போடும் திட்டம்!

புஷ்பா 2 திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக அமைந்துள்ளது.

கமர்ஷியல் கிங் இயக்குனர் எனப் பெயர் பெற்ற சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிய படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வந்த இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகி பேன் இந்தியா ஹிட்டானது. இதையடுத்து பாகுபலி படம் போல இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாகியுள்ளது.

ஆனால் முதல் பாகம் ரிலீஸ் ஆகி ஒரு ஆண்டு முடிய உள்ள நிலையிலும் இன்னும் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் தொடங்கவில்லை. முதல் பாகத்தின் இமாலய வெற்றியால் இரண்டாம் பாகத்தில் பல மாற்றங்களை இயக்குனர் சுகுமார் செய்து வருவதாக சொல்லப்பட்டது. அதையடுத்து படத்தின் கதையை சர்வதேச நாடுகளில் நடப்பது போல மாற்றியுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து சமீபத்தில் படத்தின் பூஜை நடந்தது. அதில் அல்லு அர்ஜுனை தவிர படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்நிலையில் இப்போது திரைக்கதைப் பணிகள் முடிந்துள்ள நிலையில் முதலில் படத்தின் ப்ரமோஷனுக்கான டீசரை ஐதராபாத்தில் படமாக்க உள்ளார்களாம். அதன் பின்னரே படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக இந்த படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

Previous articleரயிலில் பையில் இருந்த பச்சிளம் குழந்தை! தாயின் இரக்கமற்ற செயல்!
Next articleபதுங்கி பாய்ந்த பாகிஸ்தான்… தென் ஆப்பிரிக்காவுக்கு கொடுத்த இமாலய இலக்கு!